நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பிலும் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவிப்பு!
Monday, September 30th, 2024
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி கட்சி கொழும்பிலும் போட்டியிடும் எனக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை யாழ். தெல்லிப்பளை – மாவைகலட்டி பகுதி மக்களை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா சந்தித்துக் கலந்துரையாடினார்.
சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே டக்ளஸ் தேவானாந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு மக்கள் மத்தியில் உரையாற்றிய டக்ளஸ் தேவானாந்தா, தான் மீண்டும் நாடாளுமன்றம் செல்வேன் என நம்புவதாகவும், தேர்தலின் பின்னர் ஆட்சியில் இருப்பவர்களுடன் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கட்சியின் கொள்கையின்படி இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்த அரசு முன்வர வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
குணசீலனுக்கு படிக்க முடியு மானால் சுகாதாரத்துறை பற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர்க ளின் நாடாளுமன்ற உரைக ள...
தேசிய நல்லிணக்கத்தின் ஊடான அமைச்சர் தேவானந்தாவின் முயற்சிக்கு அமெரிக்கா பாராட்டு!
|
|
|
நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
இணைய நிதி மோசடி - மாதத்தின் கடந்த சில நாட்களில் 230 க்கும் அதிகமான முறைப்பாடுகள் - இலங்கை கணினி அவ...
பொது மலசலகூட விவகாரம் - யாழ் மாநகரசபைதன்னிச்சையாக செயற்பட்டால் சேவையை முடக்கி போராடுவோம் - இ.போ.ச எச...


