அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை!
Friday, July 13th, 2018
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்தவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம் இன்று வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான சிவகுரு பாலகிருஷ்ணன் அன்னாரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
வலிகாமம் மேற்கு சுழிபுரத்தில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இன்றையதினம் இடம்பெற்ற 29 ஆவது நினைவு தின அனுஷ்டிப்ப இடம்பெற்றது. இதன்போது உருவச்சிலைக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 36 மாணவர்களுக்கு 9 ஏ!
வரிசெலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலைகளில் அனுமதி - கல்வி அமைச்சு!
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவை உறுதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு!
|
|
|


