அஞ்சல் சேவை முடக்கம் : 15 கோடி நட்டம்!

Friday, June 15th, 2018

தபால் பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக சுமார் ஆயிரம் அஞ்சல் பொதிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

பணம் அனுப்புதல், முத்திரை விற்பனை, பொதி சேவை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அஞ்சல் திணைக்களத்துக்கு 15 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சல் திணைக்களத்திற்கான தனியான ஆட்சேர்ப்பு முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பதில் உப அஞ்சல் நிலைய அதிபர்களின் பணியை பாதுகாத்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ச்சியாக 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts:

அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சி...
கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு - அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்...