அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
Saturday, February 5th, 2022
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சிங்கள நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில் –
அரசியல்வாதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அமைய கைதிகளை விடுதலை செய்வது சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முறையிடச் சென்றவரை கைது செய்தனர் பொலிஸார்!
சுகாதார விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேசிய சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படும் - பாதுகாப்பு...
சாதாரண தரப் பரீட்சை - மாணவர்களின் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
|
|
|


