தேர்தலை நடத்துங்கள்: அரச தலைவர்களிடம் தேஷப்பிரிய கடிதம்!

Thursday, May 31st, 2018

மாகாண சபைத் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்ரமசிங்க ஆகியோர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களிடம் கோரியுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுத் தலைவரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளினதும், ஏனைய மாகாண சபைகளினதும் தேர்தல்களை உரிய காலத்துக்குள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறித்த கடிதம் மூலம் அவர் கோரியுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


சுய விருப்புடன் ஓய்வுபெற விண்ணப்பித்த இ. போ. சபை ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு!  
சர்வதேச அரங்கில் முகங்கொடுத்துவருகின்ற நியாயமற்ற அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உறுதியாக ஒத்துழைப...
தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமுகமளிக்க வேண்டும்...