தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமுகமளிக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்து!
Friday, September 20th, 2024
தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமூகமளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் தினத்தன்று குறித்த நியமனக்கடிதங்களை மாற்றுவதும் இரத்து செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறாத வாக்காளர்கள் உரிய அஞ்சல் அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
தேவைப்படும் பட்சத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வாக்காளர் அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000
Related posts:
அமெரிக்க இராஜாங்க உயர் அதிகாரி இலங்கை வருகை!
தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் - கோருகின்றார் யாழ் அரச...
கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றும் – இதுவே எமது கட்சியின் எதிர்பார்ப்பும் – ஈ....
|
|
|


