வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சி!
Tuesday, May 29th, 2018
யாழ் குடாநாட்டுச் சந்தைகளில் தற்போது வாழைப்பழத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக சுன்னாகம், மருதனார்மடம், திருநெல்வேலி ஆகிய சந்தைகளில் கதலி வாழைப்பழம் கிலோ ரூ.10 ௲ 20 விலையிலும், இதரைப்பழம் கிலோ ரூ 20 -30 விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை மற்றும் தென்னிலங்கைக்கான வாழைப்பழம் ஏற்றுமதி குறைவடைந்தமையும் இவ் விலைச்சரிவிற்கான காரணமாக இருக்கலாம் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த பல மாதங்களாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காயின் விலை குறைவடைந்துள்ளமையால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related posts:
மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அற...
கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை குறைந்தது ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் - கல்வி அமைச்சர் சுசில்...
பொதுச் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள 100 ) தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்!
|
|
|


