தமிழ் இளைஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

Sunday, May 27th, 2018

இராணுவம் சாராத வேலைகளுக்கு 150 தமிழ் இளைஞர்கள் யாழ். கட்டளை தலைமையகத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் முயற்சியால் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேலைகளுக்கு 50 இளையோர்களை நியமிக்கவே பாதுகாப்பு அமைச்சு முதலில் அனுமதி வழங்கி இருந்த நிலையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான நேர்முக தேர்வு அண்மையில் இராணுவத்தின் மனித நேய செயல் திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ.செல்வாவின் நெல்லியடி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நேர்முக தேர்வுக்கு வந்திருந்த இளைஞரொருவர் வேலைகளுக்கு 100 பேரையாவது நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு கட்டளை தளபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் கட்டளை தளபதி பாதுகாப்பு அமைச்சுக்கு பரிந்துரை மேற்கொண்ட நிலையில் அதனை ஏற்றுக் கொண்ட பாதுகாப்பு அமைச்சு உடனே 150 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அந்தவகையில், 100 பேர் வருகின்ற வாரங்களிலும், 50 பேரை ஓரிரு மாதங்களுக்கு பின்னரும் நியமனம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106