யாழில் திடீரென ஏற்பட்ட மின்னலால் கொளுந்துவிட்டு எரிந்த மரம்!

Tuesday, May 22nd, 2018

யாழ்.திருநெல்வேலியில் இன்று பிற்பகல் திடீரென மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்துள்ளது.

சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாகக் கொளுந்துவிட்டு எரிந்த தீயை விரைவாகச் செயற்பட்ட யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் தாக்கத்தால் இடி விழுந்த வீட்டில் வசித்த வந்த குடும்பம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய போதும் வீட்டின் பிரதான மின் இணைப்பு ஆளி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் வீட்டின் பல பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரமும் பழுதடைந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான குடும்பப் பெண் கருத்துத் தெரிவிக்கையில்,

‘கணவர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் நானும் எனது பிள்ளையும், அம்மாவும் வீட்டுக்குள் இருந்தோம். திடீரென பெரும் சத்தத்துடன் வீட்டுக்குள்ளிருந்த பிரதான மின் இணைப்பு ஆளி வெடித்துச் சிதறியது. இதனால் நாம் பயத்துடன் வீட்டுக்குள்ளேயே நின்றோம். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது தென்னைமரம் கொளுந்துவிட்டு எரிவதை அவதானித்தோம்’ என்று தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106