முகமாலை உபதபாலகம் இதுவரை இயங்கவில்லை!
Wednesday, May 23rd, 2018
கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் உள்ள உபதபாலகம் இதுவரை ஆரம்பிக்கப்படாமையால் இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது தேவைகளுக்கு யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாழ் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
முகமாலை பகுதியில் இயங்கிவந்த உப தபாலகம் கடந்த 2009 ஆம் ஆண்டின் பின்னரான் மீள்குடியமர்வின் பின்னர் இதுவரை இயங்காத நிலை காணப்படுகின்றது.
இதனால் இப்பகுதி மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்வதற்கு தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பிரதேசத்திற்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக முகமாலைப் பகுதியில் இருந்து சுமார் எண்பதிற்கும் மேற்பட்டவர்கள் முகமாலை உப தபாலகத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய மாதாந்த உதவிக் கொடுப்பனவுத் தொகையை பெற்றுக் கொள்வதற்கு அதிக பணம் செலவழித்து எழுதுமட்டுவாழ் செல்ல வேண்டியுள்ளது என்றும் எனவே, குறித்த தபாலகத்தை உரிய இடத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106