மீண்டும் வெனிசுலா ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மதுரோ!
Monday, May 21st, 2018
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள்மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Related posts:
பிரேசிலில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூவர் சுட்டுக் கொலை!
நேபாளத்தில் வெள்ளம் நிலச்சரிவு - 23பேர் உயிரிழப்பு!
இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்!
|
|
|


