துருக்கி மற்றும் சிரியாவில் பேரனர்த்தம் –பலி எண்ணிக்கை 15,000 ஐ கடந்தது – மீட்பு பணிகளில் உலக நாடுகள் பல ஒன்றிணைவு!

Thursday, February 9th, 2023

தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தில் மேலும் 40,000 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் தொடர்பில் துருக்கிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை பிரச்சினைக்குரியது என துருக்கி ஜனாதிபதி தையிப் ஏர்டோகன் நேற்று (8) ஒப்புக்கொண்டுள்ளார்.

அனர்த்த வலயத்தை பார்வையிட்ட ஜனாதிபதி ஏர்டோகன், மீட்பு பணிகள் தற்போது சாதாரணமாக நடந்து வருவதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த அனர்த்தத்துடன் எதிர்வரும் மே மாதம் தேர்தலை சந்திக்கவுள்ள ஏர்டோகன் தொடர்பில் துருக்கி மக்கள் மத்தியில் விரக்தி அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், 2011 ஆம் ஆண்டில் ஜப்பான் நிலநடுக்கத்தில் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர். துருக்கிய நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதனை நெருங்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றறமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106