பயணத்தை தடுக்க முனைந்தார்கள்  – ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு!

Tuesday, May 22nd, 2018

தாம் தெஹ்ரானுக்கு வருவதை “அவர்கள்” தடுக்க முனைந்தார்கள் என்று மைத்திரிபால சிறிசேன தம்முடன் ஈரானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால தெஹ்ரானில் உள்ள விடுதியில் ஓய்வாக இருந்தபோதே ஊடகவியலாளர்களிடம் இதனைக் கூறினார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தமக்கு அழுத்தம் கொடுத்தது கொழும்பைத் தளமாகக்கொண்ட மேற்குலக இராஜதந்திரிகளா, உள்ளுர் அதிகாரிகளா அல்லது இருதரப்பினருமா என்பதை அவர் வெளியிடவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன.

எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இதுதான் முதல் தடைவ அல்ல. எமது நாடு இறைமையுள்ள நாடு. நாட்டுக்கு எது நல்லது என்று நாங்கள் தான் முடிவு செய்யவேண்டும். ஈரானுக்குப் போகக்கூடாது என்ற கோரிக்கைகளை நான் செவிசாய்க்கவில்லை.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் கட்டாருக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த போதும் இNதுபோன்ற அழுத்தத்தை சந்தித்தேன். அங்கு போகக்கூடாது என்று நான் கேட்கப்பட்டேன். அதனை நிராகரித்துவிட்டு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டேன். இன்று கட்டார் அமீர் இலங்கையின் நல்ல நண்பராக இருக்கிறார். மற்றொரு சந்தர்ப்பத்தில் கடந்த மார்ச் 22 ஆம் திகதி மூன்று நாள்கள் பயணமாக பாகிஸ்தானுக்குச் செல்ல முயன்றபோதும் எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பாகிஸ்தானின் குடியரசு நாள் நிகழ்வில் முதன்மை விருந்தினராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தேன். எனது அந்த முடிவினால் சிலர் அதிர்ச்சியடைந்திருந்தனர் என்பது எனக்குத் தெரியும். நான் சரியான முடிவையே எடுத்தேன் என்பதில் உறுதியாக இருந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106