இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால் ஷரபோவா!

Saturday, May 19th, 2018

ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும் 7 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-6 6-1 6-2 என்ற செட் கணக்கில் போக்னினியை (இத்தாலி) தோற்கடித்து அரை இறுதியை எட்டினார்.

இந்த பட்டத்தை வென்றால் நடால் மீண்டும் முதலிடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால் இறுதியில் மரின் சிலிச் (குரோஷியா) 6-3 6-3 என்ற நேர் செட்டில் காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) தோற்கடித்தார். பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) விரட்டினார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் தற்போது தரவரிசையில் 40-வது இடம் வகிப்பவருமான ரஷியாவின் மரிய ஷரபோவா 6-ம் நிலை வீராங்கனையும் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) எதிர்கொண்டார். 3 மணி 13 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் ஷரபோவா 6-7 (6-8) 6-4 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் ஷரபோவா டாப்-10 வீராங்கனை ஒருவரை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106