இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!
Saturday, May 19th, 2018
உலக வங்கியின் உதவியுடன் கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறைக்கான தார்க்கலவைசாலை அமைப்பதற்கு காணிகளை வழங்கிய பொதுமக்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் கொடிகாமத்திலிருந்து தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட முள்ளி வரையான பகுதிகளில் தார்க்கலவைச்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் காணிகளுக்கான பெறுமதி விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட காணிகளுக்கான பெறுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அலுவலர்கள் முன்னிலையில் காணி உரிமையாளர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
புகையிலைக்கான வரியை 90 வீதமாக அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் கைச்சாத்து!
பேருவளை - பன்னில பகுதியில் 140 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவ...
|
|
|


