இந்தியாவிலிரந்து வரும் பயணிகளால் வடக்கில் நோய்த்தொற்றுக்கான ஆபத்து – முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி!

Wednesday, May 16th, 2018

வடமாகாணத்திற்கு வருகைதரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரிஎஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையானது மலேரியா முழுமையாக ஒழிக்கப்பட்ட நாடாக ஐ.நா சுகாதார ஸ்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் வட மாகாணத்திற்கு இந்தியர்கள் தொடர்ந்துசெல்வதனால் மலேரியா மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக கர்ப்பிணித் தாய்மார் காய்ச்சலில் பாதிக்கப்படும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கு வைத்தியர்கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இருந்து மலேரியா நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், நோயை பரப்பும் எனோபிலஸ் என்ற நுளம்பை இன்னமும் முழுமையாக நாட்டை விட்டுஒழிக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேரியா நோய் தொற்றுடைய நபர் ஒருவர் வருகைதந்தால், அவரது உடம்பில் உள்ள ப்லேஷ்மோடியம் வைவெக்ஸ் (Plasmodium vivax)என்ற மலேரியா நோயைப் பரப்பும் நுளம்பு ஊடாக வேறு ஒருவரின் உடலுக்குள் செல்ல கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106