டெல்லியை வென்றது பெங்களூர்!
Sunday, May 13th, 2018
விராட் கோஹ்லி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சு தெரிவு செய்தது.
அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
முதல் ஓவரை சாஹல் வீசினார். முதல் ஓவரின் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார்.
அடுத்து அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதன்பின் வந்த விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ரிஷப் பந்த் ஆட்டமிழக்கும்போது டெல்லி டேர்டெவில்ஸ் 13 ஓவரில் 109 ஓட்டங்கள் தான் எடுத்திருந்தது. இதனால் டெல்லி அணி 150 ஓட்டங்களுக்குள்தான் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 6-வது வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா வாணவேடிக்கை நிகழ்த்தினார்.
அவர் 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ஓட்டங்களும், விஜய் சங்கர் 21 ஓட்டங்களும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 182 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
பெங்களூர் அணி சார்பில் யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும், மொயின் அலி, மொகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ஓட்டங்களை இலக்காக கொண்டு பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேல், மொயின் அலி இறங்கினர்.
படேல் 6 ஓட்டங்களிலும், மொயின் அலி ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தது.
அவர்களை தொடர்ந்து இறங்கிய விராட் கோஹ்லியும், டி வில்லியர்சும் தங்களது அதிரடியை ஆரம்பித்தனர்.
இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்தனர்.
கோஹ்லி 40 பந்தில் 70 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மந்தீப் சிங் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் கான் 11 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பெங்களூர் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும், லாமிச்சென், ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106