வடகொரியாவிற்கு அமெரிக்கா நிதியுதவி!
Sunday, May 13th, 2018
வடகொரிய தமது அணு ஆயுதங்களை கையளிக்க முன்வந்தால் தாங்கள் வடகொரியாவிற்கு நிதியுதவிகளை வழங்க தயாரென அமெரிக்கா தெரிவித்துள்ளதாக அமெரிக்கவெளியுறவுத்துறை செயலாளர் மைக் பம்ப்யோ தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கொண்ட அணு ஆயுத பரிசோதனைகளை கைவிட்டு உலக நாடுகளுடன் இணக்கமான நல்லுறவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை வடகொரியாமேற்கொண்டு வருகின்றது.
இதன் முதற் கட்டமாக அண்மையில் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் தென் கொரிய உயர் மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். அத்துடன் அடுத்தகட்டமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே அமெரிக்கா தமது குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
Related posts:
ஹோம்ஸ் எரிவாயு தளத்தினை சிரிய படையினர் மீள கைப்பற்றினர்!
பிலிப்பைன்ஸை தாக்கியது சக்தி வாய்ந்த சூறாவளி - 16 பேர் பலி!
இலங்கையில் இருந்து தாயகம் புறப்பட்ட 240 ஈரானிய கடற்படையினர்!
|
|
|


