இலங்கையில் இருந்து தாயகம் புறப்பட்ட 240 ஈரானிய கடற்படையினர்!
Wednesday, April 15th, 2026
….
வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர், விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து IRIS Dena மீட்கப்பட்ட 32 ஈரானியர்கள் இதில் அடங்குதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவர்களுடன் இலங்கையில் தங்கியிருந்த ஈரானியக் கடற்படையின் ஐரிஸ் புஷர் IRIS Bushehr கப்பலைச் சேர்ந்த 208 ஈரானியர்களும் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
துருக்கிக்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் இவர்கள் அனைவரும் ஈரானுக்குப் புறப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துளள்து.
இது தொடர்பாகத் தகவல்களை பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான ஒத்துழைப்புடன், சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைவாக இந்தத் தாயகம் அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106