பனை அபிவிருத்தி சபையால் 5 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி!
Sunday, May 13th, 2018
பனை அபிவிருத்தி சபை ஐயாயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்துள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள சபையின் உற்பத்தி நிலையங்களில் இந்த பனை வெல்ல உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த உற்பத்தி நிலையங்கள் ஊடாக சுமார் நாற்பது ஆயிரம் கிலோ வரையிலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
தற்போது முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட பனை வெல்லம் சகல கற்பகம், விற்பனை நிலையங்கள் ஊடாகவும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டும் வருகின்றன.
உற்பத்தி செய்யப்படும் பனை, வெல்லங்களை வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்தவும் சபை தயாராகி வருகின்றது.
Related posts:
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்!
இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பியுங்கள் - அ...
|
|
|


