அழகுசாதன கிறீம் ஒழுங்குபடுத்தலுக்கு வருகிறது சட்டம் – நுகர்வோர் அதிகார சபை !
Friday, May 11th, 2018
சருமத்தை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான கிறீம் வகைகள் உடம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதனால் இதனை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது.
சருமத்தில் பூசப்படும் கிறீம் வகையில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள், அவற்றைப் பயன்படுத்த வேண்டிய முறை குறித்த விடயங்கள் அடங்கிய ஆவணமும் அதில் கட்டாயம் அச்சிடப்படும் வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அரசிதழ் அறிவித்தலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைத் தலைவர் ஹஸித திலக ரத்ன கைச்சாத்திட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சட்டத்துக்கு அமைவாகச் செயற்படுவதற்குத் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் 6 மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
சருமத்தில் பூசப்படும் சில கிறீம் வகைகள் தரமற்றது என்பது தெரிய வந்தது. அத்தோடு பயன்படுத்த வேண்டிய அளவு குறிப்பிடப்படாமையால் சருமத்தில் கூடுதலான கிறீம் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106