யாழில் 860 ஹெக்டேயரில் வாழைச் செய்கை!
Friday, May 11th, 2018
யாழ். மாவட்டத்தில் சுமார் 860 ஹக்டேயர் நிலப்பரப்பில் வாழைச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புத்தூர், உரும்பிராய், உடுவில் ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே கூடுதலானோர் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. தற்போது வாழைக்குலை அதிகமாக அறுவடை செய்யப்பட்டு அவை சந்தைக்கு எடுத்து வரப்படுவதால் அவற்றின் விலையும் சற்று சரிந்துள்ளது. அவற்றுடன் புதிய இன வாழை செய்கையும் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த செய்கையை ஊக்குவிக்கவும் விவசாய திணைக்களம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Related posts:
700 மில்லியன் ரூபா மோசடி! ஒரு பில்லியன் ரூபா அபராதம்?
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!
அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களில் நூற்றுக்கு 15 வீதமானவர்கள் மாத்திரமே வேலை செய்கின்றனர் ...
|
|
|


