400 மீற்றர் ஓட்டத்தில் நெடுந்தீவு சாதித்தது!
Wednesday, May 9th, 2018
யாழ்ப்பாண மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவால் நடத்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடரில் பெண்கள் பிரிவு 400 மீற்றர் ஓட்டத்தில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த திருட்சிகா தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஜே.திருட்சிகா ஒரு நிமிடம் 9 செக்கன்களில் ஓடிமுடித்து தங்கப் பதக்கத்தையும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த என்.தனுஜா ஒரு நிமிடம் 9 செக்கன்கள் 3 மில்லி செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும் வேலணை பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஏ.மேரி எரோமி ஒரு நிமிடம் 12 செக்கன்கள் 2 மில்லி செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
Related posts:
அயர்லாந்தை வென்றது ஆப்கானிஸ்தான்!
பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கண்ணீர் மல்க மன்னிப்பு கோரினார் ஸ்மித் !
சுய தனிமைப்படுத்தப்பட்ட கங்குலி!
|
|
|


