உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களுக்கு ரூ.135 மில்லியன் மாதாந்தக் கொடுப்பனவு!
Monday, May 7th, 2018
உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 8,691 உறுப்பினர்களுக்கும் மாதந்தோறும் 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுளய்ளன.
இதன் பிரகாரம் ஒவ்வொரு மாநகர முதல்வர்களுக்கும் தலா 30 ஆயிரம் ரூபாவும், பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும் நகரசபை முதல்வர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாவும் பிரதி முதல்வருக்கு 20 ஆயிரம் ரூபாவும் பிரதேச சபை தவிசாளருக்கு 25 ஆயிரம் ரூபாவும் பிரதி தவிசாளருக்கு 20 ஆயிரம் ரூபாவும் ஏனைய உறுப்பினர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாவும் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
அடிப்படைக் கொடுப்பனவு தவிர போக்குவரத்து, தொலைபேசி கட்டணம், முத்திரைக் கட்டணம் போன்ற கொடுப்பனவுகளும் அளிக்கப்படுகின்றன.
உள்ளுராட்சி சபைகள் கல்வி, நிதி, சுகாதாரக் குழுக்களை உருவாக்கும் அதிகாரம் கொண்டவை. ஒவ்வொரு அமர்வுக்கும் உறுப்பினர் ஒருவர் 550 ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை கோர முடியும்.
அதிகபட்சமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் 33, 500 ரூபாவை ழுழுக் கொடுப்பனவாகப் பெற்றிருக்கும் நிலையில் குறைந்த பட்சமாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் 20 ஆயிரம் ரூபாவை மாத்திரம் பெற்றுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக அரசாங்கம் 606.35 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
எஞ்சிய கொடுப்பனவுத் தொகையை உள்ளுராட்சி சபைகள் தமது வருமானத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106