கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு  9 ஆம் திகதி ஆரம்பம்!

Friday, May 4th, 2018

இம் மாதம் 9 ஆம் திகதி டோக்கியோ நகரில் கிழக்காசிய நாடுகளான ஜப்பான், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து குறித்த நாடுகள் தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவும், நட்புறவை பலப்படுத்தவும் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகளை நடத்திவருகின்றன.

முதல் மாநாட்டை 2008ஆம் ஆண்டு ஜப்பான் நடத்தியது. அதன்பிறகு ஆண்டுதோறும் சுழற்சி முறையில் இந்த மாநாடு ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டின் உச்சி மாநாடு டோக்கியோ நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த மாநாடு தற்போது நான்காவது முறையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 8 ஆம் திகதி ஜப்பானுக்கு செல்லும் சீன பிரதமர் லி கெகியாங் ஜப்பான் மன்னர், அதிபர், பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதுடன் பல்வேறுவிவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106