சர்வதேச கிரிக்கெட் நடுவர் குழாம் விபரங்கள் வெளியீடு!
Sunday, June 12th, 2016
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2016/2017 ஆம் ஆண்டு பருவ காலத்துக்கான நடுவர் குழாம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந் ஆண்டு அறிவிக்கப்பட்ட குழாமில் பெரியளவில் மாற்றங்கள் இன்றி, இந்த குழாம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி பங்கெடுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு சார்பான, அல்லது தவறான தீர்ப்புக்கள் வழங்கிய நடுவர் ரவியும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.
அத்துடன் இந்தக் குழுவில் 12 நடுவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
2015/2016 ஆம் ஆண்டு பருவகாலத்தில் இடம்பெற்ற அனைத்து வகையான ஆட்டங்களில் 95.6 வீதமான முடிவுகள் நடுவர்களால் சரியாக வழங்கப்பட்டுள்ளன.
டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் அடங்கலாக குறித்த காலப்பகுதியில் மொத்தம் 220 போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நடுவர் குழாமில் அலீம் டார், குமார் தர்மசேன, மரைஸ் எராஸ்மஸ், கிரிஸ் காப்பானே, இயன் கோல்ட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கேட்டல் போரோ, நியேல் லோங், ப்ருஷ் ஓக்ஷென்பொர்ட், சுந்தரம் ரவி, போல் ரைபல், ரோட் டக்கர் ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106