2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை!
Saturday, April 28th, 2018
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த போட்டிகள் 2019 மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, இலங்கை அணிக்கான முதல் போட்டி ஜூன் மாதம் 01ஆம் திகதி நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ளது.
அத்துடன் இலங்கை அணி ஜூன் 04ஆம் திகதி ஆப்கானிஸ்தான் மற்றும் ஜூன் 07ஆம் திகதி பாகிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பங்களாதேஷ், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இந்தியா உடன் ஆடவுள்ளது.
இந்த உலகக் கிண்ண போட்டியானது கடந்த 1992-ம் ஆண்டு நடந்ததைப் போன்று ரவுண்ட் ராபின் முறையில், அதாவது ஒவ்வொரு அணியும் அனைத்து அணியுடனும் ஒருமுறை மோதும்வகையிலேயே அட்டவணை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106