டி 20 கிரிக்கெட் நடத்த 104 நாடுகளுக்கு அங்கீகாரம்: ஐ.சி.சி!

Friday, April 27th, 2018

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து, 104 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு ‘டி20 அந்தஸ்து’ அளிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் கொல்கத்தா நகரில் ஐ.சி.சியின் செயற்குழு நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம் என 18 நாடுகளுக்கு டி20 அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 104 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கும் டி20 அந்தஸ்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தாண்டு ஜூலை 1ஆம் திகதி முதல் விளையாடப்படும் அனைத்து மகளிர் டி20 போட்டிகள் மற்றும் ஜனவரி 1ஆம் திகதி முதல் விளையாடப்படும் ஆடவர் டி20 போட்டிகள் அனைத்துக்கும், சர்வதேச அந்தஸ்து அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சர்வதேச அளவில் டி20 போட்டிகளுக்கான தரவரிசையும் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106