ஜொலிஸ்ரார் இமாலய வெற்றி!

Friday, April 27th, 2018

கொக்குவில் சனசமூக நிலையம் யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இடையில் நடத்தும் துடுப்பாட்டத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆட்டமொன்றில் ஜொலிஸ்ரார் அணி இமாலய வெற்றி பெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜொலிஸ்ரார் அணியை எதிர்த்து ஸ்ரான்லி அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிஸ்ரார் அணி 29.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக சஜிசன் 56 ஓட்டங்களையும் பிரசன்னா 31 ஓட்டங்களையும் சந்தோஸ் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஸ்யந்தன் 4 இலக்குகளையும் விஸ்ணு 2 இலக்குகளையும் விதுசன், மதன், பிரசாந்த், துசிகரன் ஆகியோர் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்ரான்லி அணி 18.3 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதிகபட்சமாக சுதர்சன் 20 ஓட்டங்களையும் பிரசாந்த் 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் உமாகரன் 3 இலக்குகளையும் பிரசன்னா, சந்தோஸ் 2 இலக்குகளையும் வாமணன், சாரங்கன் ஆகியோர் ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106