இரவுநேர கேளிக்கை விடுதியில் பாரிய தீ விபத்து!
Wednesday, April 25th, 2018
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் குயிங்யுவான் நகரில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சியுடன் கூடிய நைட் கிளப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 18 பேர் சிக்கி பலியாகியுள்ளதுடன் 5 பேர்காயமடைந்துள்ளனர்.
சீனாவில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. அதனை அமுல்படுத்துவதும் முறைப்படுத்தப்படவில்லை. இதனால் அந்நாட்டில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டுவருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் தாதியர் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பலியான சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய கேள்விகள் எழுந்தன. இந்த தீவிபத்து சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என 21 பேரை கடந்த வருடம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எண்ணெய் கிணறு தீபிடித்து விபத்து : இந்தோனேஷியா வில் 15 பேர் பலி!
சீனாவில் இறைச்சி விற்பனை நிலையங்களுக்கு தடை!
ஒடிசா விபத்து: பெட்டிகளைப் போலவே இடிபாடுகளுக்குள் சிக்கி இதயக்கூடும் நொறுங்கிவிட்டது - வைரமுத்து வேத...
|
|
|


