எண்ணெய் கிணறு தீபிடித்து விபத்து : இந்தோனேஷியா வில் 15 பேர் பலி!
Thursday, April 26th, 2018
எண்ணெய் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவின் மேற்கே அமைந்த அசே மாகாணத்தில் எண்ணெய் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர்.
40க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்து உள்ளனர்.இந்த நிலையில் அந்நாட்டின் பேரிடர் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், குழாய்களை வெல்டிங் செய்யும்பொழுது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
Related posts:
தில்லியை அச்சுறுத்தும் நச்சுப்புகை : பாடசாலைகளுக்கு 3 நாள் விடுமுறை!
நேரடி போருக்கு பாகிஸ்தான் இராணுவம் தயாராக உள்ளது - பாகிஸ்தான் இராணுவ தளபதி !
பரிஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு!
|
|
|


