முதலிடம் பிடித்த பஞ்சாப் !
Tuesday, April 24th, 2018
11வது இந்திய பிரிமியர் லீக் போட்டியின் டெல்லியில் இடம்பெற்ற 22வது போட்டியில் டெல்லி டெயார்டெவிஸ் அணியை கிங்ஸ் இளவன் பஞ்சாப் அணி 4 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி டெயார்டெவிஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இளவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 143 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலளித்த டெல்லி டெயார்டெவிஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இந்தபோட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் கிங் இளவன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சன்ரைசஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் முறையே 4ஆம் 5ஆம் மற்றும் ஆறாம் இடத்தில் காணப்படுகின்றன. 7வது இடத்தில் மும்பை இன்டியன்ஸ் அணியும், இறுதி இடத்தில் டெல்லி டெயார்டெவில்ஸ் அணியும் காணப்படுகின்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106