தென்னாபிரிக்கா சுற்றுத் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு !

Tuesday, April 24th, 2018

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள கிரிக்கட் தொடருக்கான கால அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது.

சிம்பாப்வே, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள கால அட்டவணை வெளியிடப்பட்டது.

இதன்படி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சிம்பாப்வே செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வரையில், 3 ஒருநாள், 3, 20க்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த வருடம் டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா செல்லும் பாகிஸ்தான், 2019 பெப்ரவரி மாதம் வரையில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 20க்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 20க்கு20 போட்டிகளில் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் விளையாடவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி 2019  பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி டேர்பனில் ஆரம்பமாகவுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106