மெஸ்ஸி ஹாட்ரிக்!
Sunday, June 12th, 2016
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மெஸ்ஸி ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்த அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறியது.
45வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் சிகாகோவில் நடந்த ‘டி’ பிரிவு போட்டியில் அர்ஜென்டினா- பனாமா அணிகள் மோதின.
ஆரம்பத்திலே ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அர்ஜென்டினா அணிக்கு நிக்கோல்ஸ் 7வது நிமிடத்தில் கோல் போட்டார்.
இதனையடுத்து 61வது நிமிடத்தில் அகஸ்டோவுக்கு பதில் முதுகு வலிகாயத்தில் இருந்து மீண்ட மெஸ்ஸி களமிறங்கினார். இவர் 67 மற்றும் 78வது நிமிடத்தில் கோல் போட அணி வலுவடைந்தது.
இதைத் தொடர்ந்து 87வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் போட்ட மெஸ்ஸி ‘ஹாட்ரிக்’ கோலை பதிவு செய்தார். அகுரோ 90வது நிமிடத்தில் தன் பங்கிற்கு ஒரு கோல் போட்டார்.
பனாமா அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா 5-0 என அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே சிலி அணியை அர்ஜென்டினா வீழ்த்தியிருந்தது. இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகள் பெற்ற அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேறியது.



|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106