வட்சன் சதம் : சென்னை அணி வெற்றி!

Saturday, April 21st, 2018

ஐ.பி.எல் போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடுமாறு சென்னை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி , துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 204 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

சென்னை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய  ஷேன் வொட்சன் 106 ஒட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஆறு, 6 ஓட்டங்கள் மற்றும் ஒன்பது, 4 ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

சுரேஸ் ரைனா 46 ஒட்டங்களையும் , பிராவோ 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி , 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் பென் ஸ்டொக்ஸ் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் , சஹார் , தாஹூர் , பிராவோ மற்றும் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

அதன்படி , நான்கு போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106