தொண்டர் ஆசிரியர்களுக்கு இன்று நேர்முகத்தேர்வு!

Thursday, April 19th, 2018

கடந்த மாதம் நியமனம் வழங்கப்படாது தவறவிடப்பட்ட தொண்டர் ஆசிரியர்களை இன்று நேர்முகத்தேர்வுக்காக கொழும்பு வருமாறு மத்திய கல்வியமைச்சு கடிதங்கள் அனுப்பியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் கெட்டியாராட்சியின் கையொப்பத்துடன் அழைப்புக் கடிதங்கள் தொண்டர் ஆசிரியர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேர்வின் போது தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றத் தொடங்கிய காலத்தை உறுதிப்படுத்தும் முகமாக சம்பவத்திரட்டினை உறுதிப்படுத்தி சத்தியக்கூற்று சமர்ப்பித்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஜி.சி.ஈ. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழ்கள் என்பவற்றை எடுத்துவருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலருக்கு இக்கடிதம் கிடைக்கவில்லை என அறியமுடிகிறது.

Related posts:

கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை – பரிசோதனைகள் தொடர்கின்றன - யாழ் போதனா வைத்தியசாலை ப...
வவுனியாவில் பெரும்போக நெல் உற்பத்தி வெற்றியளித்துள்ளதாக விவசாய சேவைகள் உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவி...
தமிழ் மக்களுக்கு தலைமைத்துவமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிடைத்திருப்பது பெரும் வரப்பிரசாதம் - பருத...

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடு செய்யும் கால அவகாசம் நாளை நிறைவு!
எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதா...
தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவ...