கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை – பரிசோதனைகள் தொடர்கின்றன – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை!

Wednesday, May 13th, 2020

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை என யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார்.

எனவே வைத்திய சாலை உழியவர்களும், பொது மக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தற்போதும் சிலர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமான இடங்களில் இருந்தவர்களும் சந்தேகத்தின் அடிப்படையில் இங்கு கொண்டு வரப்படுகின்றார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறானவர்களிடம் சோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. இருப்பினும் அண்மையில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஊடரங்கு தளர்த்தப்பட்டதால் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் வைத்திய சாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று தொடர்பான அடிப்படையான வேண்டுகைகள், நடவடிக்கைகளை நிச்சயமாக பின்பற்ற வேண்டும். தற்போது ஊடரங்கு சட்டம் அமுலில் இல்லை. இதனால் ஓர் இடத்தில் இருப்பவர்கள் இன்னுமொரு இடத்திற்கு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளது.

ஆகவே தொற்றுக்குள்ளானவர் இப்பகுதிக்கு வந்தால் அவரையும், அவருடன் தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டுபிடிப்பதற்காகவே பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றது.

வைத்திய சாலை பணியாளர்களுக்கு கொரோனாவில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொண்டு, நோயாளர்களை அனுகுவது என்பது தொடர்பாக பயிற்சிகளையும், விழிப்புணர்வுகளையும் கொடுத்து வருகின்றோம்.

வைத்திய சாலையில் வருவபர்வகளின் முழுமையான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும், தொற்றாளர்கள் மற்றும் தொற்று அபாய பகுதியுடன் தொடர்புள்ளதா என்ற தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

இத்தகவல்களைக் கொண்டு இங்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள சாவால்களுக்கு மத்தியில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106