நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் புதிதாக வர்த்தமானி!
Wednesday, April 18th, 2018
நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுறுத்தும் வகையில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் குறிப்பிடப்படாமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நேரம் குறிப்பிட்டு புதிதாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாடு திரும்பியதன் பின்னர் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
விரைவில் மாற்றம் அடையும் இலங்கையில் நிலப்பரப்பு!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!
டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனம் முயற்சி - பரீட்சாத்த சேவையாக இரத்மலானையிலிருந்து பலாலி வந்தடைந்த ப...
|
|
|


