கடலுக்கு சென்றவரை காணவில்லை!
Saturday, June 11th, 2016
வல்வெட்டித்துறை, பொலிகண்டிப் பகுதிக் கடலில் கடற்தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09.06.2016 இரவு கடற்தொழிலுக்குச் சென்ற பொலிகண்டி கிழக்கு, நிலவன் குடியிருப்பு முகாமில் வசித்துவரும் பீற்றர் அன்ரனி ரஜிந்தன் (26 வயது) என்ற குடும்பஸ்தர் இதுவரை வீடு திரும்பவில்லையென வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கடற்தொழிலாளர் காணாமற் போனமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் - இலங்கை அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்து...
மலையகத்தில் பல்கலைக்கழகம் - அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!
நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது - அதில் தலையிடவ...
|
|
|


