சட்டவிரோதமான முறையில் இயங்கிய கொல்களத்திற்கு சீல்!
Friday, April 13th, 2018
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மாட்டிறைச்சிக் கடைக்கு அருகில் நீண்ட காலமாக அனுமதியின்றி மாடுகளை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டடம் சாவகச்சேரி நகரசபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இயங்கி வரும் இறைச்சிக் கடைக்கு அருகில் சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைபாட்டை அடுத்து விசாரணைக்கு சென்றபோதுஅங்கு சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி வெட்டப்பட்டமைக்கான சான்றுகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் அவதானித்தனர்.
இதனையடுத்து இறைச்சி கடையை இயக்கி வந்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின்உறுப்பினர்கள், சுகாதார பிரதிநிதிகள் பொலிசார் நேரில் சென்று பரிசோதனை செய்து சீல் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு வருகைதரும் தாய்லாந்து பிரதமர்!
பல்கலைக்கழகதிற்கு இணையாக தரம் உயரும் தேசிய கல்வியியற் கல்லூரி!
ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆபத்தானது – உலக நாடகளை எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பு!
|
|
|


