செயலக அலுவலர்களுக்கும் அதிகஸ்டப் பிரதேசக் கொடுப்பனவு – வழங்குமாறு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் கோரிக்கை!

Thursday, April 12th, 2018

கஸ்டப் பிரதேசப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு கஸ்டப் பிரதேசக் கொடுப்பனவு வழங்கப்படுவது போன்று அதிகஸ்டப் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் கொடுப்பனவு வழங்க வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் என்.நிரஞ்சலா தெரிவித்தார். மாந்தை  கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் பணி செய்கின்ற ஆசிரியர்களுக்கு அதிகஸ்டப் பிரதேசம் மற்றும் கஸ்டப் பிரதேசங்களில் பணிபுரிகின்றனர் என்ற அடிப்படையில் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

வெளிமாவட்டங்களில் இருந்து எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அரச உத்தியோகத்தர்கள் பலர் பணிக்காக வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. குறைந்தது கஸ்ரப்பிரதேசத்துக்கான கொடுப்பனவு என்றாலும் இந்தப் பிரதேசத்தில் வேலை செய்கின்ற வெளிமாவட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவேண்டும். அதன்மூலமாக அவர்கள் பணி செய்வதற்கு இலகுவாக இருக்கும். இது தொடர்பில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரதேச செயலர் தெரிவித்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106