டிப்பர் சாரதிக்கு ரூ.80,000 தண்டம்!

Wednesday, April 11th, 2018

மின்கம்பத்துடன் மோதிய டிப்பர் வாகன சாரதிக்கு 80 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. வவுனியா தாண்டிக்குளத்தில் கடந்த 3 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் டிப்பர் வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

வவுனியா குருமன்காடு ௲ தாண்டிக்குளம் முதன்மை வீதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்திலிருந்து பின்பக்கமாக வீதிக்கு ஏற முற்பட்ட டிப்பர் வாகனம் வீதியின் அருகே காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மின்கம்பம் துண்டாகவுடைந்து வீழ்ந்தது. இதனால் அந்தப் பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டது. மின்சார சபையினர் பாதிப்படைந்த மின்கம்பத்தைச் சீராக்கி தடைப்பட்ட மின்சாரத்தை சீர்ப்படுத்தினர். குறித்த டிப்பர் வாகன சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டமையையடுத்து சாரதிக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106