9 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசா்ஸ் வெற்றி!

Tuesday, April 10th, 2018

ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டியில் சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதற்கு பின்னா் களம் இறங்கியுள்ள ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணியின் தலைவர் வில்லியம்சன் பந்து வீச்சை தெரிவு செய்தார்.

முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி வீரா்கள் ஐதராபாத் அணி பந்து வீச்சாளா்களின் தாக்குதலை எதிர் கொள்ள சற்று சிரமப்பட்டனா். அந்த அணி முதல் 10 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள் எடுத்தது.இருப்பினும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் அந்த அணியால் 54 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

20 ஓவா் முடிவில் ராஜஸ்தான அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் மட்டும் 49(42) ஓட்டங்கள் எடுத்தார். எஞ்சிய வீரா்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை.இந்நிலையில் 126 ஓட்டங்கள்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரா் ஷிகா் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தவான் 57 பந்துகளை எதிர் கொண்டு 77 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய அணித்தலைவர் வில்லியம்சன் 35 பந்துகளை எதிர் கொண்டு 36 ரன்கள் எடுத்தார்.இறுதியில் அந்த அணி 15.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பெற்றது.பொறுப்புடன் விளையாடி 77 ஓட்டங்கள் சோ்த்த ஷிகா் தவான் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106