மான்செஸ்டர் சிட்டியை போராடி வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட்!
Tuesday, April 10th, 2018
இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் போக்பாவின் சிறப்பான ஆட்டத்தால் மான்செஸ்டர் சிட்டியை 3 – 2 என மான்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது.
இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று முன்தின ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் சிட்டி ௲ மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிடும் என்பதால் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற வேண்டிய நோக்கத்தில் களமிறமிங்கியது.
சொந்த மண்ணில் விளையாடிய மான்செஸ்டர் சிட்டி முதல் பாதி நேரத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் வின்சென்ட் கொம்பானி 25ஆவது நிமிடத்திலும், குண்டோகன் 30ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதி நேரத்தில் மான்செஸ்டர் சிட்டி 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீறுகொண்டு எழுந்தது. 53ஆவது மற்றும் 55ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து போக்பா கோல் அடித்து அசத்தினார். 69ஆவது நிமிடத்தில் கிறிஸ் ஸ்மாலிங் மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் மான்செஸ்டர் யுனைடெட் 3௲2 என வெற்றி பெற்றது.
பர்ன்லே, டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ், நியூகேஸ்டில் அணிகள் வெற்றி பெற்றன. தற்போதைய சூழ்நிலையில் மான்செஸ்டர் சிட்டி 84 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மான்செஸ்டர் யுனைடெட் 71 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், லிவர்புூல் 67 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106