தேர்தல்களுக்கு தயாராகுமாறு ஐ.தே.வுக்கு பிரதமர் ரணில் அழைப்பு!

Saturday, April 7th, 2018

தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டு எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தாவில் விருந்து இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய பிரதமர் தனக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிக்க துணை நின்ற கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.

என்னைப் பதவி கவிழ்ப்பதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு அரசாங்கத்தைப் பதவி கவிழ்ப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையின் மூலம் வெற்றி பெறலாம் என்பதை காட்டியிருக்கிறோம். இனி அடுத்ததாக மாகாண சபை, நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களுக்குத் தயாராக வேண்டும்.

அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் திசைதிருப்பல்களுக்கு அகப்படாமல் ஒற்றுமையுடன் தேர்தல்களுக்குத் தயாராக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106