போத்தல் நீரின் தரம் தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!
Friday, April 6th, 2018
போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் விலை அதன் தரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
தற்போது நாட்டின் பல மாவட்டங்களிலும் நிலவும் வரட்சியுடன் கூடிய காலநிலையினால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சாதகமாகப் பயன்படுத்திஇ சில வர்த்தகர்கள் தரம் அற்ற போத்தலில் அடைக்கப்பட்ட நீரை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றார்கள்.
வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. வரட்சியான காலநிலையினால் ஒன்பது மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 43 ஆயிரம் குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய குடிநீர் ஏனைய வசதிகள் உலர் உணவுப் பொருட்கள் என்பனவற்றை வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106