றேசிங் ஹோமர்ஸ் புறா கடத்திய இருவர் கைது!

Thursday, April 5th, 2018

றேசிங் ஹோமர்ஸ் புறாக்களைக் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 26 புறாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

தலைமன்னார் கடலில் படகு ஒன்றில் புறாக்களுடன் பயணித்த இருவரையும் கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அவர்கள் சுங்கத் திணைக்களத்தின் தெல்லிப்பளையிலுள்ள கிளையின் அலுவலக உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புறாக்களைக் கடத்திய இருவரும் தலைமன்னாரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் பின்னர் இருவருக்கும் 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டு படகுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

புறாக்கள் கொழும்பிலுள்ள திணைக்களம் ஒன்றுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெல்லிப்பளையிலுள்ள சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்தப் புறாக்களைப் பல மைல்கள் தூரத்துக்குக் கொண்டு சென்று விடுத்தாலும் மீண்டும் தமது இடங்களுக்குச் சென்றுவிடும் தன்மை வாய்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106