ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் மாற்றம்!
Tuesday, April 3rd, 2018
ஐந்து வருட காலம் ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக பணியாற்றிய ரவிநாத் ஆரியசிங்கவை குறித்த பதவியில் இருந்து நீக்கி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலாக ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவராக வெளிநாட்டு அலுவலகங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னர் ஜெனீவாவில் புதிய இலங்கை தூதுவர் காரியாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிதி நகர்த் திட்டம் கைவிடப்பட மாட்டாது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
எச்சரிக்கை: தென்கிழக்கு ஆசியாவில் புதுவகை மலேரியா!
வடக்கில் இம்முறை தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் - அமைச்சர் அப்துல் கலீம்!
|
|
|


