படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அரைக்காற்சட்டையுடன் அநுர அதிகாலை வந்தார்! – மன்றில் சி.ஐ.டி. அறிக்கை
Friday, June 10th, 2016
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு கொலை செய்யப்பட்ட இடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க அதிகாலை வேளையில் அரைக்காற்சட்டையுடன் வந்துள்ளார். இது குறித்து எம்மிடம் சாட்சியங்கள் உள்ளன. இந்த விடயத்தை விசாரணை செய்யும் போது நாம் அநுர சேன நாயக்கவின் சாரதியாக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரையும் விசாரணை செய்தோம்.
இதன்போது குறித்த பொலிஸ் சாரதிக்கு எந்த விடயத்தை எப்படி வாக்குமூலாமாக வழங்க வேண்டும் என்பதை அனுர சேனநாயக்க சொல்லிக்கொடுத்துள்ளதை எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது.
எனவே சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிணையில் விடுதலையானால் சாட்சிகளை இப்படி கலைத்துவிடுவார் . எனவே அது விசாரணைக்கு பாதிப்பாக அமையும் என அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் தெரிவித்தார்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த விவகாரத்தில் விசாரணைகளை மூடி மறைக்கவும் கொலை சதி முயற்சியுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா, முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க ஆகியோருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடும் போதே சிரேஷ்ட சட்டவாதி இதனைச் சுட்டிக்காட்டினார்;
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் நேற்று வழமைப் போன்று காலை 10.00 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளின் கால தாமதம் காரணமாக வழக்கானது 20 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக நீதிவான் நிஸாந்த பீரிஸினால் அறிவிக்கப்ப்ட்ட்து. எனினும் வழக்கானது மீண்டும் சுமார் 2 மணி நேரங்களின் பின்னரேயே விசாரணைக்கு வந்தது.
இதன்போது சந்தேக நபர்னான முன்னாள் நாரஹேன்பிட்டி குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா, மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநயக்க ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடக மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்
விசாரணையாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர, விசாரணை அதிகாரிகளான பிரேமதிலக, ரத்னபிரிய அகியோர் மன்றில் பிரசன்னமாகினர். அவர்கள் சார்பில் அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நயக்க மன்ரில் ஆஜரானார்
இந் நிலையில் முதலாவது சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரணவும், சந்தேக நபரான அனுர சேனநாயக்க சார்பில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும் மன்றில் பிரசன்னமகியிருந்தனர். பாதிக்கப்பட்ட தரப்பான வஸீம் தாஜுதீன் குடும்பத்தினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மிஸ்பாஹ் சத்தார் மன்றில் ஆஜராகியிருந்தார்.இந்நிலையில் விசாரணைகள் ஆரம்பமானபோது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரிகளால் மேலதிக விசாரணை அறிக்கையொன்று நீதிவானிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 14 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளன. வஸீம் தாஜுதீன் விவகாரத்தில் முதலில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க அழுத்தம் கொடுத்துள்ள்மை உறுதியாகிறது. அத்துடன் வாக்கு மூலம் பெறும் போதும் அதிலும் அவர் தலையீடு செய்து அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்.
இதனைவிட முதலாவது சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேரா, தாஜுதீன் விவகாரம் குறித்து எமக்கு அளித்த விளக்கம் அனைத்தும் பொய்யானவை என்பது சாட்சியங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் இருவரும் விசாரணையை மூடி மறைத்துள்ளமை உறுதி. எனினும் மனிதப் படுகொலையை ஏன் இவர்கள் விபத்தாக காட்ட வேண்டும், இதற்கான அவசியம் என்ன என்ற இடத்திலேயே தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கொலையுடன் இவர்களுக்கு சதி முயற்சி குற்றச்சாட்டு உள்ள நிலையில் அந்த சதி கொலையின் பின்னர் செய்யப்பட்டதா அல்லது கொலையின் முன்னர் பிரதான சந்தேக நபருடன் இணைந்து செய்யப்பட்டதா என்பதை வெளிப்படுத்த விசாரணைகள் தொடர்கின்றன.
இதற்காக மொபிடல் நிறுவனத்தின் ஒத்துழைப்பு தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது’ என மேலதிக அறிக்கையில் உள்ள விடயங்களை அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க மன்றுக்கு அறிவித்தார்
இதனைவிட அந்த மேலதிக அறிக்கையில் 2012 அம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவு 11 மணியாகும் போதும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் குணசேகரகே பியசேன என்பவரும் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளதாக கூரி அவரின் வாக்கு மூலத்தில் கூறப்பட்ட விடயங்களும் இணைக்கப்ப்ட்டிருந்தன.
அந்த வாக்கு மூலத்தில் சாலிகா மைதானப்பகுதியில் கார் ஒன்று எரிவது குறித்து தனக்கு கடமை நேரத்தில் கேள்விப்பட்டதாகவும், 17 ஆம் திகதி அதிகாலை 1.00 மணிக்கு தான் கழிவறை சென்ரதாகவும் சென்று வரும் போது பொலிஸ் நிலையத்தின் வாயில் அருகே கறுப்பு நிற கார் ஒன்று நின்றிருப்பதை அவதானித்ததாகவும் அதன்போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க பொலிஸ் நிலையம் வந்துள்ளதை தெரிந்துகொன்டதாகவும் பின்னர் அவர் காரில் ஏறி வெளியேறிச் செல்வதையும் தான் கண்டதாகவும் தெரிவித்ததாக குறிப்பிடப்ப்ட்டிருந்தது.
இந்நிலையில் வஸீமின் பிரேதம் மீது முதலில் பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக இலங்கை மருத்துவசபை முன்னெடுத்துள்ள விசரணைகள் தொடர்பில் நீதிவான் கேள்வி எழுப்பினார்.
இதன்போது இலங்கை மருத்துவ சபை சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, கடந்த நான்காம் திகதி ஆனத்த சமரசேகரவுக்கு எதிரான குற்றப் பத்திரிகை மருத்துவ சபையின் விசாரணை மன்றினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை 23 ஆம் திகதி முதல் அவருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார். அத்துடன் ஆனந்த சமரசேகரவின் உதவியாளர்களான வைத்தியர் இராஜகுரு, வைத்தியர் அமரரத்ன ஆகிய வைத்தியர்களுக்கு எதிராக எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி முதல் விசாரணை இடம்பெறும் என சுட்டிக்காட்டினார்
இதனையடுத்து முதலாவது சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேர சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரன தமது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
தனது சேவை பெறுநரான சுமித் சம்பிக்க பெரேர குற்றவியல் சட்டத்தின் 127 அவது பிரிவின் கீழ் நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் வழங்க தொடர்ந்தும் தயாராக உள்ளதாகவும் அதற்காக அனுமதி வழங்குமாறும் அவர் நீதிவானை கேட்டுக்கொண்டார்
இதனையடுத்து அனுர சேனநாயக்கவின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா தனது தரப்பு வாததை முன்வைத்தார்
‘நான் எனது சேவை பெறுநர் சார்பில் மீண்டும் இன்று பிணை கோருகிறேன். கடந்த தவணை வாதங்களுக்கு மேலதிகமாக இன்று எனது சேவை பெறுநருக்கு ஏன் பிணை வழங்க வேண்டும் என்பது குறித்த மேலும் சில காரணிகளை முன்வைக்கின்றேன்.
எனது சேவை பெறுநருக்கு பிணை மறுக்கப்பட கடந்த தவணையில் இரு காரணிகளை நீதிவானாகிய நீங்கள் முன்வைத்தீர்கள். ஒன்று சாட்சிகளுக்கு அச்சுறுத்தல். மற்றையது அரசியலமைப்பில் உள்ள சந்தேக நபரின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்தல் ஆகியனவாகும்.
உண்மையில் முதலாவது காரணியின் பால் பார்ப்போமாக இருந்தால் இதுவரை இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான சாட்சியங்கள் பொலிஸ் சாட்சியங்கள். அதில் அனைத்தும் எனது சேவை பெறுநருக்கு எதிரகவே வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கையில் நாம் அவர்கள் வாக்கு மூலம் வழங்கும் போது செய்யாத இடையூறும், அச்சுறுத்தலும் இனி மேல் எப்படி செய்வது தற்போது இந்த விவகாரத்தில் அறிவியல் ரீதியிலான தடயங்கள் மிக முக்கியமானவை. வைத்திய சபையின் விசாரணையிலோ, அல்லது மொபிட்டல் நிறுவனம் வழங்கும் தகவல்களிலோ, கனடா நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட இருக்கும் சி.சி.ரி.வி. காட்சிகள் தொடர்பிலான விவகாரத்திலோ எப்படி எனது சேவை பெறுனர் தாக்கம் செலுத்துவார். இது சாத்தியமற்றது இதனைவிட எனது சேவை பெறுநர் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் அந்த இடத்தில் சிவில் உடையில் இருந்ததாக குற்றப் புல்னாய்வுப் பிரிவு முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணைகளை செய்யும் முகமாக எனது சேவை பெறுனரே அவரது சாரதி, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரை பொலிஸாரிடம் அனுப்பி வாக்குமூலம் வழங்கச் செய்து விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கினார். அப்படி இருக்கையில் அவர் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழ்ங்காது சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பார் எனக் கூற முடியும்?
அத்துடன் வாழும் உரிமை தொடர்பில் நாமே தீர்மனிக்க வேண்டும். சிறையில் எமக்கு எதிரிகள் பலர் உள்ள நிலையில் எமது வீட்டிலேயே ஒரு மூலையில் இருப்பதே எமக்கு பாதுகாப்பாகும். எமது பாதுகாப்பு குறித்து நம் பொருப்பேற்கிரோம். அப்படி இருக்கையில் அந்த விடயமும் பிணை மறுக்கப்பட ஏதுவான காரணி என கொள்ள முடியாது.இந்த வழக்கை பொறுத்தவரை பிரனைச் சட்டத்தின் கீழ் விஷேட நிலமைகளை பிணை பெற முன்வைக்க வேண்டியதில்லை. எனினும் விஷேட காரணிகளையும் நான் முன்வைக்கின்றேன். அதற்காக எனது சேவை பெறுநர் வைத்தியர் சூல பெரேராவிடம் சிகிச்சைப் பெற வேண்டியுள்ளதை நான் மன்றின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். எனவே இந்த வழக்கை பொறுத்தவரை பிணை வழ்னக்க ஏதுவான அத்தனை விடயங்களும் உள்ளன என்பதை இந்த மன்றுக்கு சுட்டிக்காட்டுகிறேன். ஆகவே எனது சேவை பெறுனருக்கு பிணையளிக்க கோருகிறேன். என்றார்
இதற்கு அரச சட்டவாதி டிலான் ரத்நாயக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டார். நாம் இந்த வழக்கின் பாரதூரம், குற்றச் சாட்டு மற்றும் சாட்சிப் பாதுகாப்பு குறித்து அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இந்த எதிர்ப்பை முன்வைக்கின்றோம்
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க அதிகாலை வேளையில் அரைக்காற்சட்டையுடன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். இது குறித்து எம்மிடம் சாட்சியங்கள் உள்ளன. இந்த விடயத்தை விசாரணை செய்யும் போது நாம் அனுர சேனநாயக்கவின் சாரதியாக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரையும் விசாரணை செய்தோம். இதன்போது குறித்த பொலிஸ் சாரதிக்கு எந்த விடயத்தை எப்படி வாக்கு மூலாமாக வழங்க வேண்டும் என்பதை அனுர சேனநாயக்க சொல்லிக்கொடுத்துள்ளதை எம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. எனவே சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிணையில் விடுதலையானால் சாட்சிகளை இப்படி கலைத்துவிடுவார் . எனவே அது விசாரணைக்கு பாதிப்பாக அமையும்
அத்துடன் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 113,296 இன் கீழ் குற்றச் சாட்டு உள்ளது. அதாவது கொலைக்கு சதித் திட்டம் தீட்டியமை தொடர்பானது. உண்மையில் இந்த சதி வஸீம் கொலை செய்யப்பட முன்னர் தீட்டப்பட்டதா அல்லது அவரது கொலையின் பின்னர் அதனை மறைக்க தீட்டப்பட்டதா என்பது குறித்தே நாம் தற்போது விசாரிக்கின்றோம்
அத்துடன் முதல் சந்தேக நபரான சுமித் சம்பிக்க பெரேர இரகசிய வாக்கு மூலம் வழங்குவதில் எமக்கு எந்த சிக்கலும் இல்லை. அவரது வாக்கு மூலத்துக்கு அமைய நாம் பிணை தொடர்பில் பின்னர் ஆலோசிக்கலாம். என்றார்
இதனையடுத்து நீதிவான் திறந்த மன்றை அழைத்து தனது உத்தரவுகளை வாசித்தார்
முதலாவது சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி கடந்த 3 தவணைகளில் இரகசிய வாக்கு மூலம் வழங்க கோருகிறார். இதனை என்னால் இப்போது நிராகரிக்க முடியாது. இன்று நான்காவது தடவையாகவும் கோரிக்கை முன்வைத்துள்ளார். அவர் சுயாதீனமாக குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது பிரிவின் கீழ் வாக்கு மூலம் வழங்கத் தயார் எனில் நாளை ( இன்று) காலை 10.00 மணிக்கு அவரை இந்த மன்றில் முன்னிலைப்படுத்த சிறைச்சாலை அதிகரிகளுக்கு உத்தரவிடுகிறேன்.
அத்துடன் அரச தரப்பு மற்றும் சந்தேக நபர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு வாதங்களை நன் கருத்தில் கொண்டேன். அதன்படி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க இந்த மன்று மறுக்கின்றது.
எனினும் அனுர சேனநாயக்க சார்பில் அவரது உடல் நிலைமை குறித்து முன்வைக்கப்பட்ட விடயங்களை இம்மன்று கருத்தில்கொண்டு கடந்த தவணை சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு இந்த மன்று உத்தர்வு ஒன்றினை பிறப்பித்தது.
இதன்படி சிறைச்சாலை வைத்திய பணிப்பளர் ஒரு கடிததை எமக்கு அனுப்பியுள்ளார். அதில் அனுரவின் வைத்தியரான சூல பெரேரா முன்னிலையில் அவரை ஆஜர்ச செய்த பின்னர் முடிவை அறிப்பதாக கூறியுள்ளார். அப்படியானால் அனுர சேனநாயக்கவை உடனடியாக வைத்தியர் சூல பெரேராவின் முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை பெற்று அதன்பின்னர் சிறைச்சாலை வைத்தியசலையில் அவருக்கு சிகிச்சை வழங்க முடியுமா முடியாதா என்பதை உள்ளடக்கிய அறிக்கையை இந்த மன்றுக்கு அறிவிக்க உத்தரவிடுகிறேன். அதன்பின்னர் பிணை வழங்குவது குறித்து ஆராயலாம் அதுவரை சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தர்வு பிறப்பிக்கிறேன்எ ன்றார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106