கொக்குவில் ச.ச நிலையத்தின் கிரிக்கட் சுற்றுப் போட்டி!

Sunday, April 1st, 2018

கொக்குவில் சனசமூக நிலையத்தின் எற்பாட்டில் யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட்  சுற்றுப் போட்டியொன்றை வருடா வருடம் நடத்திவருகின்றது .

இந்தச் சுற்றுப் போட்டியின் 25 ஆவது வருடச் சுற்றுப் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை முதல் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது 1991 ஆம் ஆண்டு முதல் நடை பெற்று வரும் இந்தச் சுற்றுப் போட்டியில் 1996,2006,மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் போட்டிகள் நடைபெறவில்லை .

இது வரையில் நடைபெற்ற 24 சுற்றுப் போட்டிகளில் ,சென்றலைட்ஸ்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆகிய அணிகள் தலா 4 தடவைகளும் ஜொனியன்ஸ் ஜொலிஸ்ரார்ஸ் ,பற்றீசியன் அணிகள் தலா 3 தடவைகளும் மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகம் 2 தடவைகளும் .திருநெல்வேலி  விளையாட்டுக்கழக அணி 1 தடவையும் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டன

இம் முறையில் சுற்றுப் போட்டியில் மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றுகின்றன 31 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டிகளில் காலை நடைபெறும் போட்டியில் கிறாஸ்கொப்பர்ஸ் அணியை எதிர்த்து றெஜின்போ விளையாட்டுக்கழகமும் மாலை நடைபெறும் போட்டியில் அரியாலை ஜக்கிய விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து விக்டோரியா விளையாட்டுக்கழக அணியும் மோதியது முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலையில் நடைபெறவுள்ள போட்டியில் யூனியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ரைரோன் அணியும் மாலை நடைபெறவுள்ள போட்டியில் ஸ்கந்தா ஸ்ரார்ஸ் அணியை எதிர்த்து ஹாட்லி விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106